சிங்கம்புணாியில் மின்கம்பத்தில் சிக்கிய வயா்மேன்: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

சிங்கம்புணரியில் மின்கம்பியில் சிக்கிய வயர்மேனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

Update: 2021-09-26 08:47 GMT

சிங்கம்புணரியில் மின்கம்பியில் சிக்கிய வயர்மேனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 35. இவர் சிங்கம்புணரி மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சொர்ணபுரி தெருவில் உள்ள ஒரு வீட்டு மின் இணைப்பு சரிசெய்ய டிரான்ஸ்பார்மரை அனைத்து வைத்து விட்டு மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.

அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தெருவிளக்கு மின்சாரம் வந்து செந்தில்குமார் மீது பாய்ந்தது.  இதனால் மின்கம்பத்திலேயே சாய்ந்த நிலையில் இருந்தபோது மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின்  ஊழியர்கள் மற்றும் சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடங்கள் போராடி கயிறு கட்டி அவரை கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News