ஆகஸ்ட் புரட்சியின் போது வெள்ளையர்களால் 75 பேர் சுட்டு கொல்லப்பட்டட தேவகோட்டை தியாகிகள் பூங்காவின் அவல நிலை

பூங்கா1902 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடத்தப்பட்டது. அன்றைய தினம் தேவகோட்டை நீதிமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 75 பேரை வெள்ளையர்கள் சுட்டுக்கொன்றனர்;

Update: 2021-07-10 09:45 GMT

ஆகஸ்ட் புரட்சியின் போது வெள்ளையர்களால் 75 பேரை சுட்டு கொல்லப்பட்ட தேவகோட்டை தியாகிகள் பூங்காவின்  அவல நிலை குறித்து சமூக ஆர்வலர்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.  

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு எதிரில் தியாகிகள் பூங்கா  அப்போதைய மாநில கவர்னராக இருந்த சர்தார் ஹர்தர் கோர் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த பூங்கா1902 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடத்தப்பட்டது. அன்றைய தினம் தேவகோட்டை நீதிமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 75 பேரை வெள்ளையர்கள் சுட்டுக்கொன்றனர் 112 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அதன் நினைவாக இந்த பூங்கா அமைக்கப்பட்டு தியாகிகள் பூங்கா என்று தேவகோட்டை மக்களால்  நினைவுச்சின்னமாக பார்க்கப்பட்டு வந்த பூங்கா பகல்நேரத்திலேயே குடிகாரர்களின் மது  கூடாரமாக மாறிவிட்டது. 

தேவகோட்டை நகராட்சி அலுவலகம் எதிரிலேயே அமைந்துள்ள இந்த பூங்கா அருகிலேயே தேவகோட்டை பேருந்து நிலையமும் பேருந்து நிலைய காவல் நிலையமும் உள்ளது.  எனினும்  இந்த பூங்காவில் நடக்கும் அவலங்களை அதிகாரிகளோ காவல் துறையினரோ கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.  

Tags:    

Similar News