தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை பட்டதாரி பெண்ணை போட்டியின்றி தேர்ந்தெடுத்த மக்கள்

தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி பெண் திவ்வியகுமாரியை கிராம மக்கள் போட்டியின்றி தேர்ந்து எடுத்தனர்

Update: 2022-02-12 06:29 GMT

தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி பெண்ணை கிராம மக்கள் போட்டியின்றி தேர்ந்தெடுத்தனர்

தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி பெண்ணை கிராம மக்கள் போட்டியின்றி தேர்ந்தெடுத்தனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய படித்த திறமையான அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட உறுப்பினர்கள் இருந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் தேவைகள் நிறைவேறும் என்பதுதான் காந்தி கனவு கண்ட கிராம ராஜ்யத்தின் மாண்பு.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் ,அழகாபுரி , வேலங்குடி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியது கோட்டையூர் பேரூராட்சி மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மென்பொருள் பட்டதாரியுமான பல்கலை கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்ற பெண்னை கிராம மக்கள் போட்டியின்றி தேர்ந்து எடுத்துள்ளனர்.

வேலங்குடி கிராமத்தில் நடைபெறும் தேர்தலில் பிள்ளையார் மடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி திறமையான நபர்களை ஒவ்வொரு தேர்தலில் தேர்ந்து எடுப்பது வழக்கம் தற்போது நடைபெற உள்ள தங்கள் கிராமத்தில் உள்ள 1வது வார்டு பெண் (பொது ) ஒதுக்கப்பட்டுள்ள்தால் தேர்தலில் போட்டியிடுட விருப்பம் உள்ளவர்கள் யார்? யார் ? என கேட்டபோது 32 பெண்கள் போட்டியிட முன் வந்தனர். இதில் ஹைதராபாத்தில் பிறந்து படித்து 7 மொழிகள் அறிந்த பல்கலைகழகத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி பெண் திவ்வியகுமாரி (31 ) கிராம மக்கள் தேர்ந்து எடுத்தனர் . தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவருக்கு பேருராட்சி செயலர் வெற்றி சான்றிழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உடன் கிராமத்தினர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

Similar News