காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி மோதல்: இருவர் காயம்

காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் இருவருக்கு மண்டை உடைத்ததால் பரபரப்பு

Update: 2021-09-25 17:00 GMT

சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் இருவருக்கு மண்டை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி தமிழக 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர்


அப்போது,  முன்னாள் தேவகோட்டை நகர மன்ற தலைவர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தாலும் தாங்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருவதாகவும் ,கட்சி நிகழ்ச்சிகளுக்கு எதற்கும் அழைப்பதில்லை என்று கார்த்தி சிதம்பரம் முன்பு குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதன் பின்பு காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டதில் இருவருக்கு மண்டை உடைத்ததால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News