சாெத்துக்காக பெரியம்மாவையே சரமாரி வெட்டிக்கொலை; கல்லூரி மாணவர் சரண்

தேவகோட்டையில் பெரியம்மாவையே வெட்டிக்கொலை செய்த கல்லூரி மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.;

Update: 2021-08-03 15:31 GMT

தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மீனாட்சியின் உடல்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தச்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மீனாட்சி செல்வராஜ்க்கும் அவரது தம்பி சேகருக்கும் நீண்டகாலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் செல்வராஜின் மனைவி மீனாட்சி தசைவயலில் உள்ள பெட்டிக் கடைக்கு பாெருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது சேகரின் மகன் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் பாலா (வயது 19) தனது பெரியம்மாவை வழிமறித்து  சராமாரியாக வெட்டியதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய பாலா தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். தகவல் வந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் மீனாட்சியின் உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சரணடைந்த பாலாவிடம் பாேலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக தனது சொந்த பெரியம்மாவையே கல்லூரி மாணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் தச்சவயல் கிராம பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News