தேவகோட்டையில் மின் கம்பம் முறிந்து விழுந்து தற்காலிக ஊழியர் படுகாயம்

கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக பழுதான மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது;

Update: 2021-09-28 15:14 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மின்கம்பம் முறிந்து விபத்து

தேவகோட்டையில் மின் கம்பம் முறிந்து விழுந்து தற்காலிக ஊழியர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன்.இவர் இன்று மாலை நேரு பஜாரில் உள்ள மின் கம்பத்தின் இணைப்பை தூண்டித்துவிட்டு, கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்துள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக பழுதான மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் ஐயப்பன் காலில் முறிவு ஏற்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தேவகோட்டை நகர் முழுவதும் பல இடங்களில் மின்கம்பங்கள் பழுதாகியுள்ளதை மின் வாரியம் கண்டுகொள்ளாததால்தான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக தேவகோட்டை பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags:    

Similar News