அரசுப் பள்ளி ஆசிரியையின் வீட்டை உடைத்து 25 சவரன் நகை திருட்டு : போலீசார் விசாரணை

கொள்ளையர்களின் கண்களில் தட்டு படாததால் வீட்டின் படுக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த 35 சவரன் நகை அதிர்ஷ்டவசமாக தப்பியது குறிப்பிடத்தக்கது.;

Update: 2021-07-11 16:06 GMT

அரசுப் பள்ளி ஆசிரியையின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து 25 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறி்த்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, என்.ஜி.ஓ. காலனி, கம்பன் தெருவில் வசித்து வருபவர் ரேணுகாதேவி. இவர் திருவேலங்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன். தில்லியில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ரேணுகாதேவி ,ஓ.சிறுவயல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று மதியம் அவர் வீட்டிற்கு திரும்பும் போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து,வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 25 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் குன்றக்குடி வந்த போலீஸார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ நடந்த வீட்டில் தடயங்களை ஆய்வு செய்து ரேகைகளை சேகரித்தனர். இதனிடையே, வீட்டின் படுக்கையறையில், கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்திருந்த 35  பவுன்  நகை திருடர்களின் பார்வையில் படாததால், அதிர்ஷ்டவசமாக நகைகள்  தப்பியது குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News