படிக்கட்டில் மாணவர்கள் பயணம்: வட்டார போக்குவரத்து அலுவலர் பேருந்துகளில் ஆய்வு
மாணவர்களின் பேருந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் இருந்து காரைக்குடிக்கு வரும் பள்ளி ,கல்லூரி மாணவர்கள்,பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி நகரப் பேருந்துகளில் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.
அப்போது பேருந்தின் படிக்கட்டில் நின்று மாணவர்கள் ஆபத்தாக பயணித்து வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்திற்கு புகார் வந்ததையடுத்து, காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை இறக்கி,அடுத்த பேருந்தில் ஏறச் செய்து விபத்தில்லா பயணம் மேற்கொள்ள அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.