பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது
காரைக்குடி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வசந்த நகரில் வசிக்கும் கணவனை இழந்த பெண் டெய்லர் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் பத்தாவது படிக்கும் மாணவி தோழியைப் பார்த்து வருவதாக முன்று தினங்களுக்கு முன்பு சென்றவர் வீடு திரும்பாததால் மாணவியின் தாயார் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான பள்ளி மாணவியை தேடிவந்தனர்
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சரக்கு வேன் டிரைவர் சரவணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சரவணனின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று காவல்துறையினர் தேடிய பொழுது அவர் கோட்டையூர் பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது அங்கு விரைந்த மகளிர் காவல் துறையினர் மாணவியை மீட்டனர். விசாரணையில் வேன் ஓட்டுனர் சரவணன் மாணவியிடம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிபாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வேன் ஓட்டுநர் சரவணன் மீது போக்கோ சட்டத்தின் கீழ் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.