கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லை: இலங்கை தமிழர்களின் மனக்குமுறல்
கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் இலங்கை தமிழர்கள் வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அகதிகள் முகாமில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான குடும்பங்கள் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயின்றும் படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பு இல்லாததால், ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டிட வேலை கூலி தொழில்கள் சென்று வருகின்றனர். படித்திருந்தும் கல்விக்கு சம்பந்தமில்லாத அன்றாட கூலி வேலைக்கு செல்வதால் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அகதிகளாக வந்தவர்கள் என்பதால், அவர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையும் கிடைப்பதில்லை.
எனவே தங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதிகள் போன்றவற்றை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த உதவிகளை அரசு வழங்கும் பட்சத்தில் தங்களின்வாழ்வாதாரம் உயரும் என்று கூறியுள்ளனர்.