சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு: ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.;
சிவகங்கை மாவட்டத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை, 750 மையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறங்களில் 90 மையங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 55 மையங்களிலும், கிராமப்புறங்களில் 605 மையங்களும் தடுப்பூசி போட முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், .மக்கள் தொகை அதிகமாக இருக்கும் ஊராட்சியில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடப்படும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.