கூடுதல் விலைக்கு மது விற்ற அரசு மதுபானக் கடை விற்பனையாளரைத் தாக்கிய 2 பேர் கைது
அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்ப்பனையாளர் மண்டை உடைந்த இருவரை பிடித்து வடக்கு காவல்துறையினர் விசாரணை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முடியரசன் சாலையில் காவேரி மருத்துவமனை அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் பரமக்குடியை சேர்ந்த வாசகம் மூர்த்தி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று மாலை சிவகங்கை மற்றும் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் இந்த மதுபான கடையில் மது வாங்கும் பொழுது வாசகம் மூர்த்தி மது பாட்டிலுக்கு 50 ரூபாய் கூடுதலாக வாங்கியதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு மதுபான கடை விற்பனையாளர் வாசக மூர்த்தியிடம் அவர்கள் கேட்ட பொழுது குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக எடுக்கத்தான் செய்வோம் என்று கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில், வாசக மூர்த்தியின் மண்டை உடைந்தது, அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவரை பிடித்து, காரைக்குடி வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மதுபான கடைகளில் இது போன்று கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பது தொடர்கதையாகி இருந்து வருகிறது. அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாத காரணத்தினால், இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக மதுபிரியர்கள் தெரிவித்தனர்.