தேவகோட்டையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 1 டன் பழங்கள் பறிமுதல்

ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்வதாக உ ணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.;

Update: 2021-08-06 02:22 GMT

தேவகோட்டையில் ரசயாணம் தெளித்து பழுக்க வைத்த 1 டன் பழங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழக்கடை வைத்திருப்பவர் பால்பாண்டி இவருக்கு வெள்ளையன் ஊரணி குளகால்தெருவில் உள்ள குடோனில் மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை பழுக்க வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால்பாண்டி ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி வேல்முருகன் குடோனில் ஆய்வு செய்தார்.

அப்போது குடோனில் பணிபுரியும் கோபி (55) என்பவர் குடோனில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் நகர காவல் துறை ஆய்வாளர் சரவணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் சரவணன், வேல்முருகன் ஆகியோர் அதிரடியாக குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பழுக்க வைத்த மாம்பழங்கள் இடையே கால்சியம் கார்பைடு இருப்பது கண்டுபிடிக்கபட்டது. மேலும் எத்திலின் கேஸ்(ஸ்ப்ரே) உள்ளே இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு டன் மாம்பழம் மற்றும் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது மீதி பழங்கள் கொட்டி அளிக்கப்பட்டது. ஆய்வின் முடிவுக்குப் பிறகு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News