காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல்

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து தனி வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.;

Update: 2021-11-20 03:42 GMT

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனுமதியின்றி மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருவதாக, தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து, காரைக்குடி டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொள்ள கோட்டாட்சியர், மதுவிலக்கு ஆயத்தீர்வை தனி வட்டாட்சியர் பாலாஜிக்கு உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் செக்காலை வாட்டர் டாங்க் பகுதி டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொண்டார்.

இதில் அனுமதியின்றி இயங்கிய 4 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டு மகேஷ் என்பவர் உட்பட நான்கு பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News