ஆமை வேகத்தில் சாலை பணிகள் அவதிபடும் வாகனஓட்டிகள்

காரைக்குடியில் பல மாதங்களாகவே ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சாலை படுமோசமான நிலையில் உள்ளது;

Update: 2021-07-05 11:54 GMT

ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் காரைக்குடி சாலை படுமோசமான நிலையில் உள்ளது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகவும் இந்தியா முழுவதும் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி நடத்திவரும் முக்கிய தொழில் அதிபர்களின் சொந்த ஊராகவும் திகழ்கிறது

காரைக்குடியில் நுழையும் பிரதான சாலை கடந்த பல மாதங்களாகவே ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால்  பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மிகவும் குண்டும் குழியுமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு படுமோசமாக உள்ளது. காரைக்குடி நகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவே இல்லை.

பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, பரமக்குடி, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும். இந்த சாலையை உடனடியாக காரைக்குடி நகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைத்து காரைக்குடியின் பெருமையை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Similar News