தேவகோட்டையில் ரீடா தொண்டு நிறுவனத்தினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டையில் ரீடா தொண்டு நிறுவனத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2022-02-26 09:58 GMT

தேவகோட்டையில் ரீடா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கந்தசஷ்டி விழா கழக மண்டபத்தில் ரீடா தொண்டு நிறுவனம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு மாவட்ட திட்ட மேலாளர் நாகராஜன் தலைமையில் மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் வாருணிதேவி முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார், உதவி மருத்துவர் அழகுதாஸ், சமூக நலவாரியம் விரிவாக்க அலுவலர் திருமதி. இலலிதா ஆகியோர் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் பற்றியும் அதன் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.

காரைக்குடி நடன ஆசிரியை மகாராணி,ரீட்டா தொண்டு நிறுவன முன்மாதிரி கல்வியாளர் அழகேஸ்வரி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீடா தொண்டு நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கணேசன் நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News