வீட்டில் தனியாக இருந்தவரின் எரிந்த சடலம் மீட்பு
வீட்டில் தனியாக இருந்த முதியவரின் எரிந்த சடலம் மீட்பு - கொலையா ? தற்கொலையா ? என போலீசார் விசாரணை;
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்குத் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (50). வீட்டிலேயே ரொட்டி, பன் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு மீனாள் என்ற மனைவி, மகன் , மகள் உள்ளனர். கர்ப்பிணியான மகள் நாச்சியம்மையின் பிரசவத்திற்காக பெரியசாமியைத் தவிர அனைவரும் நேற்று காரைக்குடி சென்றனர்.
இந்நிலையில் இன்று பெரியசாமி தனது வீட்டில் உறங்கிய நிலையில் தீயில் கருகி இறந்து கிடப்பதாக தகவல் வர தேவகோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சிய நிலையில் சடலத்தை மீட்டனர்.
பெரியசாமியை கொலை செய்து எரித்துள்ளனரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டுள்ளாரா ? என்ற கோணத்தில் தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.