குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காரைக்குடி உதயம் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. முதியோர்கள்,சிறுவர்கள் அவதி

Update: 2021-11-27 03:58 GMT

காரைக்குடி அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று நண்பகலில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. கண்மாய் குளங்கள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி ஆங்காங்கே மழைநீர் வழிய ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியான மழையால் காரைக்குடி உதயம் நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்த நிலையில், வீடுகளுக்குள்ளும் புகுந்து குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், வீட்டில் இருக்கும் மளிகை மற்றும் இதர பொருட்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. மேலும் ,உதயம் நகர் மெயின் வீதியில் வசிக்கும் ரேகா என்பவரது வீட்டின் வெளிச்சுவர் இடிந்து விழுந்தது.   ஏற்கனவே பெய்த மழை பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் , மீண்டும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக உதயம் நகர் குடியிருப்புவாசிகள்  வேதனை தெரிவிக்கின்றனர்

எனவே தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காரைக்குடி வட்டாச்சியர் மாணிக்கவாசகத்திடம் கேட்டபோது,தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் சூழ்ந்துள்ளதாகவும், நீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News