மனநல காப்பகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவி வழங்கல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் போட்டியிட்டு 115 பேர் வெற்றி பெற்றதை கொண்டாடி வருகின்றனர்
தேவகோட்டை அருகே கோட்டூர் அன்னை சாரதா தொழிற்பயிற்சி மையம் மற்றும் மனநல காப்பகத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அசைவ உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் போட்டியிட்டு 115 பேர் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், தளபதி விஜய் வாழ்த்துக்களுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் ஆலோசனைப்படி,தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஏழை , எளியோர், ஆதரவற்றோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்ைதமிழகம் முழுவதும் வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை வடக்கு மாவட்ட நிர்வாகத்தை அறிவித்து, இரண்டாம் ஆண்டின் தொடக்க நாளான இன்று தேவகோட்டை நகர தலைவர் முஹம்மது, துணைத்தலைவர் சிவசங்கரன், செயலாளர் சரத்குமார், துணைச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் முத்துசாமி தேவா, துணை பொருளாளர் முஹம்மது, இணைச்செயலாளர் கபார்கான், ஆலோசகர் ரமேஷ், நகர விவசாய அணி தலைவர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு, தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் அன்னை சாரதா தொழில் பயிற்சி மற்றும் மனநல காப்பகத்தில், மதிய அசைவ உணவும், அடிப்படை தேவையான போர்வை, சோப்பு, பல் துலக்கி, பற்பசை போன்றவை ஆதரவற்றோருக்கு வழங்கினர். மேலும், சிவகங்கை மாவட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர், காப்பகத்தில் உணவருந்திய, மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் அதிகாரிகள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.