துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: வியப்பில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்...!
காரைக்குடி வடக்கு காவல் துறையினர் தங்க உருண்டைகளை கடத்தி வந்த திருப்பதி மற்றும் அவருடய வீட்டிற்கும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தங்கம் கடத்தியவருக்கு போலீ ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.;
துபையில் இருந்து 1/2 கிலோ தங்கம் கடத்தி வந்த நபர் (குருவி) வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது
துபையிலிருந்த அவரது முதலாளி தவச்செல்வம் (குருவியாக) ஒரு சில பொருள்களை எடுத்துக்கொண்டு இந்தியா சென்றால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கமிசன் கிடைக்கும் என்று கூறி துபையில் உள்ள இடைத்தரகர் சதாம் என்பவரிடம் அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு நபரிடம் இருந்து 180 கிராம் எடை உள்ள மூன்று தங்க உருண்டைகளை வாங்கி கொடுத்துள்ளார் தவச்செல்வம்.
அதனைப் பெற்றுக் கொண்ட திருப்பதி தனது ஆசனவாயில் வைத்து கடத்தி கொண்டு 02.04.21 அன்று சென்னை விமான நிலையம் வந்து தனது பெரியப்பா மகன் நாகநாதன் என்பவரிடம் ஒரு தங்க உருண்டையையும் மற்றொரு உருண்டையை தனது துபை ஓனர் தவச்செல்வம் சொன்ன ஆட்களிடம் கொடுத்து விட்டு, தனக்கு ஒரு உருண்டையை எடுத்துக் கொண்டு காரைக்குடிக்கு வந்து விட்டாராம். கடந்த மூன்றாம் தேதி திருப்பதி வீட்டுக்கு வந்த மூன்று நபர்கள், திருப்பதியின் தந்தை சௌந்தர பாண்டியனிடம் உனது மகன் திருப்பதியிடம் துபையில் கொடுத்து விட்ட தங்க உருண்டைகளை உடனடியாக ஒப்படைக்காவிட்டால் நன்றாக இருக்காது என்று மிரட்டி விட்டுச் சென்றனராம்.
இதையடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சௌந்தரபாண்டி உயிருக்கு பாதுகாப்பு வேண்டி புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல் துறையினர் தங்க உருண்டைகளை கடத்தி வந்த திருப்பதி மற்றும் அவருடய வீட்டிற்கும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தங்கம் கடத்தியவருக்கு போலீ ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.