காரைக்குடி நகரில் பழனி பாதயாத்திரை காவடிகள் ஊர்வலம் நடைபெற்றது

காவடியுடன் வரும் நகரத்தார் பெருமக்களிடம் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வணங்கி ஆசி பெற்றுச்சென்றனர்;

Update: 2022-01-12 05:15 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் பழனி பாதயாத்திரை காவடிகள் நகர் வலம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் பழனி பாதயாத்திரை காவடிகள் நகர் வலம் நடந்தது.

தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காரைக்குடி நகரில் இருந்து பழனிக்கு காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக ஏராளமான நகரத்தார் சென்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு காவடிகள் செக்காலை நகர சிவன் கோவில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வழியாக கொப்புடை அம்மன் கோவிலில் சென்றடைந்தது.

இரவு இங்கு தங்கி அதிகாலை குன்றக்குடி சென்றடைந்து அங்கிருந்து தேவகோட்டையில் இருந்து வரும் நகரத்தார் காவடியுடன்  பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். வழிநெடுகிலும் பட்டாசு, மேளதாளம் முழங்க பரிவர்த்தனைகள் உடன் செல்கின்றனர். காவடியுடன் வரும் நகரத்தார் பெருமக்களிடம் ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வணங்கி  ஆசி பெற்று வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News