கண்டனூரில் காதி வளாக கட்டிடம் புனரமைப்பு பணி: ப. சிதம்பரம் ஆய்வு

கண்டனூரில் செயல்படாமல் இருந்த காதி வளாக கட்டிடம் புனரமைப்பு பணிகளை ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2021-09-11 14:56 GMT

காதி வளாக புனரமைப்புப்பணிகளை ஆய்வு செய்த ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் காதி வளாகம் தொடங்கப்பட்டது. இங்கு, சலவை சோப்பு, பனை ஓலையிலான பொருட்கள், கார்பென்டர் உட்பட 15-க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில்,கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக செயல்பாடு இல்லாமல் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இந்நிலையில்,  முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றவுடன் தமிழகத்தில் உள்ள மூடப்பட்ட காதி வளாகங்களை சீரமைக்க உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் தற்போது கண்டனூர் காதி வளாகம் 45 லட்ச ரூபாயில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அக்டோபர் 12 காந்தி ஜெயந்தியன்று மீண்டும் திறக்கப்பட உள்ள காதி வளாக புனரமைப்பு பணியை இன்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News