இயற்கை விவசாய விழிப்புணர்வு: திருமண விழாவில் ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு
காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு.
காரைக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்கானிக் விதைகள் கொடுத்து உபசரிப்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தங்களை வாழ்த்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்கி மணமக்கள் ஆசி பெற்றனர்.
இதில் கத்தரி, வெண்டை, பூசணி, அவரை, சுரைக்காய், உட்பட பல்வேறு காய்கறி விதைகளை வழங்கி இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தாங்களை வாழ்த்த வருபவர்களிடம் மணமக்கள் விக்னேஷ் மற்றும் திவ்யபாரதி தம்பதியினர் ஆசி பெற்றனர். இயற்கை விதைகளை பெற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த வித்தியாசமான நற்செயலை பாராட்டி சென்றனர்.
இதனிடையே மணமக்கள் தம்பதியினர் இருவரும் விவசாயத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத, வழி, வழியாக அரசு பணி செய்யும் குடும்ப வாரிசுகள் என்பதோடு மட்டுமல்லாமல், இருவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும், தற்போது சென்னையில் தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.