ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி புகாரில் காரைக்குடியில் ஒருவர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் முதலீடு செய்து அதிகம் லாபம் ஈட்டி தருவதாகக்கூறி மோசடி செய்துள்ளதாக புகார்

Update: 2022-02-11 09:12 GMT

காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் மோசடி புகார் அளிக்க திரண்ட பாதிக்கப்பட்டவர்கள்

ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததான புகாரில் ஒருவரை  காரைக்குடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் சரவணன். இவர் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரில், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை சேர்ந்த சோம.கணேசன் என்பவர்,ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் முதலீடு செய்து அதிகம் லாபம் ஈட்டி தருவதாகக்கூறி தன்னிடம் 30 இலட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாகவும்,இதுபோல் பலரிடம் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு  செய்த போலீசார் சோம.கணேசனை கைது செய்து மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோம கணேசன் கைது செய்யப்பட்டதை அறிந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தின் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News