உள்ளாட்சி தேர்தலில் கடந்த தேர்தல் கூட்டணியே தொடரும்: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலை மூன்றாக பிரித்து சிதைத்தது அதிமுகதான்;
உள்ளாட்சி தேர்தலில் கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற கூட்டணியே தொடரும் என்று தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலை மூன்றாக பிரித்து சிதைத்தது அதிமுகதான். எனவே அதற்கு மறுப்பு தெரிவிக்க அதிமுகவிற்கு தகுதி இல்லை. உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது நடைமுறையில் சாத்தியம் தான். உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்பது அவர்களது கட்சியின் விருப்பம் என்றார் என்றார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.