காரைக்குடி - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது
காரைக்குடி - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி இடையே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து காரைக்குடி - திருச்சி ரயில் பாதையில் முதன்முதலாக மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களையும் 2027-க்குள் மின்மயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் வரை 264 கி.மீ தூரம் மின்மயமாக்கப்படும் பணி நடந்து வருகிறது இப்பணியில் முதல் கட்டமாக திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி வரை 90 கி.மீ தூரம் முழுமையாக மின் ஒயர்கள் பொருத்தும் பணி கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து காரைக்குடியில் இருந்து மின்சார ரயில் இயக்கி சோதனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து காரைக்குடி ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மின்சாரரயில் என்ஜினுக்கு சந்தனம், குங்குமம், மலர்மாலை அணிவித்து பின் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்நாபன் ஆனந்த், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆகியோர் தேங்காய் உடைத்து கடவுள் வழிபாடு செய்த பின் காரைக்குடி - புதுக்கோட்டை - திருச்சி வழித்தடத்தில் மின்சார ரயில் என்ஜின் சிறப்பு ஆய்வு சோதனை ஓட்டம் நடைபெற்றது