காரைக்குடியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி: 32 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு

இப்போட்டியில் தேர்வானவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்;

Update: 2021-12-06 03:45 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றவர்கள்

காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.55 கிலோ எடை பிரிவில் இருந்து 85 கிலோ பிரிவு வரையிலான 11பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் ஆணழகனை தேர்ந்தெடுத்தது. இப்போட்டியில் பார்வையாளராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேர்வானவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News