காரைக்குடி: தங்களது பெயர்களை வேறு வார்டுக்கு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தங்கள் பகுதி வார்டு 11 ல் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்களை 10 வது வார்டுக்கு மாற்றியதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2022-02-04 12:04 GMT

காரைக்குடி மேட்டுத் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வாக்குகளை வேறு வார்டுக்கு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

காரைக்குடி மேட்டுத் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வாக்குகளை வேறு வார்டுக்கு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வ.உ,சி ரோடு பகுதியில் அமைந்துள்ளது மேட்டுத்தெரு.இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வாக்களிக்க தங்கள் பகுதி வார்டான 11ல் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை 10 வது வார்டுக்கு மாற்றியதாகவும், மீண்டும் பழைய வார்டுக்கு மாற்ற பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கூடிய பொதுமக்கள் தங்களது வாக்குகளை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்ததை அடுத்து,வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags:    

Similar News