தமிழகம் முழுவதும் தொழில் பயிற்சி நிலையம் இல்லாத தாலுகாக்களில் விரைவில் ஐடிஐ தொடக்கம்

மாணவர்களின் நோக்கத்தை அறிந்து அதற்கான பாடத்திட்டம் தொழிற்பயிற்சி நிலையங்களில் கொண்டு வரப்படும்;

Update: 2021-10-22 10:00 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு ஐடிஐ யில் ஆய்வு செய்த அமைச்சர் சிவி.கணேசன்

தமிழகம் முழுவதும் தொழில் பயிற்சி நிலையம் இல்லாத தாலுகாக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அங்கு கூடிய விரைவில் தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றார்  திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி. கணேசன்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்  அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கடந்த கால ஆட்சியில், தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவர்களை சேர்க்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.தொழிற்பயிற்சி நிலையங்களில், தேவைப்பட்ட இடத்தில் பழைய கல்வி முறையை நீக்கிவிட்டு, நவீன கல்வி முறையை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாணவர்களின் நோக்கத்தை அறிந்து, அதற்கான பாடத்திட்டம் தொழிற்பயிற்சி நிலையங்களில் கொண்டு வரப்படும்.இது அதிக மாணவர்களை தொழில்பயிற்சி கல்வி பயில தூண்டுகோலாகவும் இருக்கும் என்றார் அமைச்சர் சிவி. கணேசன்.

Tags:    

Similar News