வீடு இடிந்து விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில், வீடு இடிந்து விழுந்த விபத்தில், இருவர் உயிர் தப்பினர்.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் முத்து வீரப்பசெட்டியார் தெருவில், ஓட்டு தாவாரத்தில் பொன்னம்மாள் சிவகாமி ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். பக்கத்தில் உள்ள செல்லப்பன் செட்டியார் என்பரின் பழமையான வீடு இடிந்து ஓட்டு தாவரத்தில் விழுந்தது.
இதில், வீடு முற்றிலுமாக வீடு சேதம் அடைந்தது பொன்னம்மாள் மற்றும் சிவகாமி கற்கள் விழும் சத்தம் கேட்டு வெளியில் வந்ததால் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டினுள் சிலிண்டர் கசிவை அணைத்து, பெரும் விபத்தை தவிர்த்ததோடு, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பழமையான வீடுகள் இடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.