தேவகோட்டை அருகே சாலை போடும் கனரக வாகன டயரில் தீப்பற்றி விபத்து
வாகனத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் கீழே குதித்து உயிர் தப்பினார்;
தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை போடும் கனரக வாகன டயரில் தீப்பற்றி எரிந்த விபத்தில் ஓட்டுனர் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்மாவிடுதிக்கோட்டை என்னும் இடத்தில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரோலர் என்னும் கனரக வாகனம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று மாலையில் பணி நடந்துகொண்டிருந்தபோது, வாகனத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் கீழே குதித்து உயிர் தப்பினார்.தகவலறிந்த தேவகோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து தீயை அணைத்தனர்.இருப்பினும் வாகனம் முழுவதும் எரிந்து சேதமாகியது.விபத்துக்கான காரணம் குறித்து தேவகோட்டைகாவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.