மழைநிவாரணம் வழங்கிய பிறகே தேர்தல் நடத்த வேண்டும்: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா
உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனால் மத்திய அரசிடமிருந்து வரும் நிதிகள் தடைபடும் என்பதால் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்
ஊராட்சி நகர்ப்புற தேர்தல் தள்ளிப் போனாலும் மழைக்கான நிவாரணங்கள் வழங்கிய பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார் பாஜக மூத்த தலைவர் ஹெச் .ராஜா.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனால் மத்திய அரசிடமிருந்து வரும் நிதிகள் தடைபடும் என்பதால் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் .கொரானா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அதனை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது. ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் ஒன்றிரண்டு தான் உள்ளது. அதுவும் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவியுள்ளது.அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் ஹெச்.ராஜா கூறினார்.