போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல் புறக்கணிப்பு
வசிப்பிடத்தை தனியார் சிலர் செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்ததாக கூறி, போராடி வருகின்றனர்;
காரைக்குடி கீழ ஊரணி பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு சிவாஜி காலனி என்று அழைக்கப்படுகிறது. இந்த குடியிருப்பில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதி திராவிடர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த இடத்தை தனியார் சிலர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயார் செய்து பட்டா மாறுதல் செய்ததாக கூறி, நீண்ட காலமாக போராடி வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக, இன்று போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டி, தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், வருவாய் மற்றும் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.