காரைக்குடியில் வீடு இடிந்து முதியவர் உயிரிழப்பு
தொடர் மழையால் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சீனிவாசநகரில்வீடு இடிந்து வீரப்பன் ( 80) என்ற முதியவர் உயிரிழந்தார்;
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழையின் காரணமாக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சீனிவாசநகரில் தொடர் மழையால் வீடு இடிந்து வீரப்பன் ( 80) என்ற முதியவர் உயிரிழந்தார்.
காரைக்குடியில் தொடர்ந்து ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. சீனிவாசாநகரில் வீரப்பன்( 80 )மட்டும் வசித்து வந்தார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக இவரது ஓட்டு வீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதைப்பார்த்த அருகில் வசிப்பவர்கள், காரைக்குடி தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வீரப்பனின் உடலை மீட்டனர்
தகவல் அறிந்த காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீரப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ,காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரைக்குடி தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.