சொத்தை எழுதி கேட்டு பேரன் கொலை மிரட்டல்: காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார்

காரைக்குடியில் மூதாட்டியிடம் சொத்தை எழுதி கேட்டு கொலை மிரட்டல் விடும் பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார்;

Update: 2022-01-23 06:08 GMT

ஆய்வாளர் மகேஸ்வரி மூதாட்டியை வரவழைத்து விசாரணை நடத்தினார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் அருகே முத்துராமலிங்கதேவர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி சௌந்தரம்மாள்.

இவரது கணவர் மற்றும் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது கணவனின் பெயரில் உள்ள ஒரு ஏக்கர் வீட்டுமனை இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றி அனுபவித்து வருகிறார். அந்த இடத்தின் இன்றைய வெளி சந்தை மதிப்பு ஒன்றரை  கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இதனிடையே, அச்சொத்தை தனது பெயருக்கு மாற்றி தரக்கோரி, பேரன் சசிவர்ணன் என்பவர் கடந்த நான்கு வருடங்களாக மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மூதாட்டி சௌந்தரம்மாள், கொலை மிரட்டல் குறித்து காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரிக்கு டிஎஸ்பி பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில் ஆய்வாளர் மகேஸ்வரி மூதாட்டியை வரவழைத்து, புகார் மனு குறித்து நாற்காலியில் அமரவைத்து கருணையோடு விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News