ரயிலில் அடிபட்டு 8 மாடுகள் பலி: தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
காரைக்குடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது ரயில் மோதியதில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலி.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு திருச்சியிலிருந்து டெமோ ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரைக்குடி அருகே பொன்நகர் என்ற இடத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே கடக்க முயன்றுள்ளன. இதனை சற்றும் எதிர்பாராத ரயில் ஓட்டுனரால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால்,
மாடுகள் மீது ரயில் மோதி, எட்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. ஒரே சமயத்தில் எட்டு மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.