செஸ் வரியை மாநிலங்களுக்கு பகிர்தளிக்க வேண்டாம் -ப.சிதம்பரம் பேட்டி

Update: 2021-06-11 09:38 GMT

 ப.சிதம்பரம்

செஸ் வரியை மாநிலங்களுக்கு பகிர்தளிக்க வேண்டாம் என்பதன் அடிப்படையிலேயே ,மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை செஸ் வரியாக வசூலிக்கிறது.காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப..சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும்,மத்திய அரசு தான்தோன்றிதனமாக செலவழிக்க இந்த செஸ் வரியை போட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய ப.சிதம்பரம். மத்திய அரசு செஸ் வரியை திணித்து, ஏழைகளின் வயிற்றில அடிக்கிறது என்றும் சாடினார்.தேர்தல் அறிக்கையை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

அதனை பாராட்டுகிறேன் என்று தெரிவித்தவர்,திமுக தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி சலுகை இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு , ஒன்றிய அரசுதான் என்றும், மத்திய அரசு என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும் இரண்டும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News