காரைக்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள கொரானா வார்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கொரானா பாதிக்கும் நோயாளிகளுக்கு சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய நகரங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-01-08 04:45 GMT

காரைக்குடி அருகே அமராவதி புதூர் காச நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா வார்டில்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

காரைக்குடி அருகே அமராவதி புதூர் காச நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரானா வார்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரானா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் கொரானா பாதிப்பிற்குள்ளாகும் நோயாளிகளுக்கு, சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி நகரங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அமராவதி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரானா நோயாளி களுக்கான சிறப்பு வார்டில், மருத்துவ அதிகாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆய்வு செய்து, அங்குள்ள மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News