தேவகோட்டை: ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் போலீஸார் ஆலோசனை

சந்தேகப்படும்படி ஆட்டோ டாக்ஸிகளில் பயணிப்போர், இரும்புப்பட்டறையில் வாள், கத்தி செய்வோர் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும்;

Update: 2021-09-26 10:46 GMT

தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், இரும்புப் பட்டறை தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

குற்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி வெற்றிச்செல்வன் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், ஆய்வாளர்கள் சரவணன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், இரும்பு பட்டறை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது.

இதில், சந்தேகப்படும் நபர்கள் ஆட்டோ டாக்ஸி களில் பயணம் செய்யும் நபர்கள் மற்றும்  இரும்பு பட்டறையில் வாள், கத்தி போன்ற பொருட்களை செய்ய வரும் நபர்களைப் பற்றி உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் .அவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபர்கள் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும்,  நகரில் குற்ற சம்பவங்கள் பார்க்கும் பொழுது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்

Tags:    

Similar News