தெரு நாய்கள் பிரச்சினை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தெரு நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தேவகோட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
தேவகோட்டை நகரில் அனைத்து பகுதியிலும் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. பெரும்பாலான நாய்கள் நோய் தாக்கியுள்ளது. அவ்வப்போது வெறிபிடித்தது போல் அடிக்கடி சண்டையிடுகின்றன.
கடந்த மாதத்தில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் 4 பள்ளி குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் எப்போதும் மிகுந்து இருப்பதால் திடீரென சண்டையிடும் நாய்களை கண்டு மக்கள் அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல வாகனங்களுக்கு பயப்படாமல் ரோட்டை ஆக்கிரமித்து 5,6 நாய்கள் படுத்துக் கிடக்கின்றன.திடீரென நாய்கள் ரோட்டின் குறுக்கே கூட்டமாக வருவதால் டூவீலர்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இரவில் மெயின் ரோட்டிலே படுத்துக் கொள்கின்றன. மின் விளக்கில் எதுவும் தெரியாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. நாய்களால் ஏற்படும் தொல்லை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எந்தவித நடவடிக்கை எடுக்காமல்அலட்சியத்துடன் தேவகோட்டை நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.