மயக்க மருந்து செலுத்திய பெண் உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை போராட்டம்

மயக்க மருந்து செலுத்திய சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வியின் உடல் நிலை மோசமாகியுள்ளது

Update: 2021-10-18 16:30 GMT

தவறான சிகிச்சையால் சிவகங்கை மாவட்டம், புதுவயல் அருகே வீரசேகரபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி

குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள மருத்துவமனை சென்ற பெண், மயக்க மருந்து செலுத்திய நிலையில் உயிரிழந்ததால்  உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், புதுவயல் அருகே வீரசேகரபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. (38).இவரது கணவர் செல்வகுமார் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.தமிழ் செல்விக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் சென்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்காக, தனது தாய் விசாலாட்சியுடன் இன்று புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழ்ச்செல்வி சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த மயக்க மருந்து மருத்துவர்  மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. மயக்க மருந்து செலுத்திய சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வியின் உடல் நிலை மோசமாகியுள்ளது. உடனடியாக அவரை, 108 அவசர ஊர்தியின் மூலம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு தமிழ்ச்செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வியின் உறவினர்கள், தவறான சிகிச்சையே இறப்பிற்கு காரணம் எனக்கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வருவாய்துறை, காவல்துறை, மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து, இறந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News