காரைக்குடியில் 2 மாணவர்களுக்கு கொரானா தொற்று: ஆசிரியர்களுக்கு கொரோனா சோதனை

அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது;

Update: 2021-09-28 12:49 GMT

காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை.

காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில், 2 மாணவர்களுக்கு கடந்த வாரம் கொரானா தொற்று உறுதியான நிலை.பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் 2 மாணவர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து, தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு வந்த பிறகு பள்ளி தொடர்ந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News