வழியில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
காரைக்குடிக்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்க வந்தபோது வழியில் 50 ரூபாய் நோட்டுக்கட்டு கிடப்பதை எடுத்து ஒப்படைத்தனர்;
வழியில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழை மாணவர்களுக்கு போலீஸார் பாராட்டி பரிசளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியை சேர்ந்த நண்பர்கள் அஜித் மற்றும் விக்னேஷ். இருவரும் . கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இன்று காரைக்குடிக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க வந்துள்ளனர். அப்போது வழியில் கீழே 50 ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று கிடப்பதை பார்த்தனர். யாருடைய பணம் என்பது தெரியாததால், அதனை உடனே காரைக்குடி வடக்கு காவல் நிலையதில் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் ராஜ்குமார், மாணவர்களின் நேர்மையை பாராட்டி பேனாக்களை பரிசளித்தார். சக காவலர்களும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில், மாணவர்கள் அஜித் மற்றும் விக்னேஷ் இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால், போலீஸார் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.