கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

Update: 2021-06-24 05:33 GMT

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி காரைக்குடியில்  உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் மதுசூதனன் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காரைக்குடி:

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் மதுசூதனன் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழ்நாடு மாநிலம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். 4,000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5,000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.

தமிழக அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது பிறந்த நாளான இன்று அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு சிவகங்கை கலெக்டர் மதுசூதனரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார்.

கண்ணதாசன் மகள் விசாலாட்சி, அகில இந்திய கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சுரேந்திரன், தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் கவிஞர் அரு.நாகப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்திருந்தது.

Tags:    

Similar News