மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம்: தொழில் வணிக கழக தலைவர் சுவாமி திராவிட மணி பேட்டி

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் தரக்கூடியதாக உள்ளது

Update: 2022-02-01 11:15 GMT

சிவகங்கை மாவட்ட தொழில் வணிகக்  கழகத் தலைவர் சுவாமி திராவிட மணி 

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் ஏமாற்றம் தரக் கூடியதாக உள்ளது என்றார் சிவகங்கை மாவட்ட  தொழில் வணிகக் கழகத் தலைவர் தேவகோட்டை சுவாமி திராவிட மணி .

மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்போடு இல்லாமல் செயல்படுத்த வேண்டும் புதிய சாலைகள் மற்றும் 2000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.  வரவேற்பு கூடியதாக உள்ளது.  அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக போய்விடக்கூடாது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் தரக்கூடியதாக உள்ளது. இதனால் சிறு குறு தொழில் பாதிக்கப்படும் என்றா சுவாமி திராவிட மணி

Tags:    

Similar News