காரைக்குடியில் மாட்டுவண்டி பந்தயம்: 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு
காரைக்குடியில் பாதரக்குடி திமுக இளைஞர்கள் நடத்திய மாட்டுவண்டி பந்தயத்தில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாதரக்குடியில் கல்லல் மேற்கு ஒன்றியம் மற்றும் பாதரக்குடி திமுக இளைஞர்களால் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தம் நடைபெற்றது.
பெரிய, சிரிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தனர்.
இதில் பெரிய மாட்டு வண்டிக்கு 9 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு நடந்த போட்டியில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 15 ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 36 ஜோடிகளும் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நடந்த மாட்டு வண்டி பந்தையத்தை சாலையின் இரு புறமும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.