காரைக்குடி: சூப்பர் மார்க்கெட்டிற்கு போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற 4 பேர் மீது வழக்கு
சூப்பர் மார்க்கெட்டிற்கு போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற 4 பேர் மீது வழக்கு பதிவு;
பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படும் சூப்பர் மார்க்கெட்டிற்குபோலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்ற4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலை அருகே மகாராஜா சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர்செல்லப்பாண்டி போல் போலியாக கையெழுத்துப் போட்டு போலி ஆவணம் தயாரித்து மின் இணைப்பு பெற முயன்றுள்ளனர்.
மஹாராஜா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் பேவின், மோகன், ஜெகன், கேலின் ஆகியோர் மின்சார வாரியத்தில் மின் இணைப்பு பெற ஆவணங்களை கொடுத்துள்ளனர் அதனை தொடர்ந்து அந்த ஆவணங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டவுடன் மின்சார வாரியம் நகராட்சிக்கு ஆவணங்களை பரிசீலனை செய்ய அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து ஆவணங்களை பரிசீலனை செய்த பொழுது அது போலி என தெரிய வந்ததைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மகாராஜா ஆயில் மில் உரிமையாளர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.