கழனிவாசலில் மாட்டு வண்டி பந்தயம் - 53 ஜோடி மாடுகள் பங்கேற்பு

காரைக்குடி அருகே கழனிவாசலில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், 53 ஜோடி மாடுகள் பங்கேற்றன.;

Update: 2021-12-13 03:45 GMT

கழனிவாசலில் நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியில் சீறிப்பாயந்த காளைகள். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, கழனிவாசலில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில்,  பெரிய மாட்டில் 15 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டில் 38 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. பெரிய மாடுகளுக்கு, 9 மைல் தூரமும்,  சிறிய மாடுகளுக்கு,  6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.


இப்போட்டியில் வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையாளர்களுக்கு, முதல் பரிசாக 50 ஆயிரத்து இரண்டு ரூபாயும்,  சுழியம் ஆற்றில் முதல் பரிசு பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு 30 ஆயிரத்து இரண்டு ரூபாயும் ரொக்க பரிசாகவும்  வழங்கப்பட்டது.  இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சிவகங்கை,  ராமநாதபுரம்,  புதுக்கோட்டை மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் பங்கேற்றனர். சாலையில் இருபுறமும் ஏராளமான பார்வையாளர்கள் இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News