பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் உட்பட 3 பேர் மீது போக்ஸோ வழக்கு
இந்த சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை;
பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் உட்பட 3 பேர் மீது போஸ்கோ வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், 17 வயது பள்ளி மாணவியும் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி, தன்னுடைய வகுப்புத் தோழி மூலமாக அறிமுகமான அழகு நிலையத்திற்குஸ தன்னுடைய தோழியுடன் கண் புருவம் திருத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்புரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையை சேர்ந்த விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த லெட்சுமி (45) மற்றும் 17 வயது மாணவி மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின் எதிரிகள் லெட்சுமி, விக்னேஷ் என்பவரையும் கைது செய்து இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மகேஸ்வரி விசாரணை செய்து வருகிறார். மேலும், தலைமறைவாக உள்ள டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவிகளின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. ஆசை வார்த்தைக்கு ஏமாறும் இது போன்ற மாணவிகள் தொடர் கதையாகி வருகின்றனர். ஆனால் பெற்றோர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.