எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி : பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்த நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பாஜக முன்னாள் தலைவர் எல் முருகனுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராக பதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு தேவகோட்டையில் நகர தலைவர் பஞ்சநாதன் தலைமையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.